முதுகலைமாணி | பட்டப்பின் டிப்ளோமா
திருச்சபைக்கு உதவும் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை வலுவூட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது
மொழி : ஆங்கிலம்
CTS முதுகலைமாணி கற்கைநெறி திட்டமானது நாட்டை விட்டு வெளியேறாமல் சர்வதேச தரத்திலான புலமையுடையவர்களிடத்தில் இருந்து வேலை மற்றும் ஊழியத்தினை விட்டுவிடாமல் முதுகலை தரத்தில் கல்வியை பெறுவதற்கான வாய்ப்பினை உள்ளுர் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய சுறுசுறுப்பாக இயங்கும் கிறிஸ்தவர்களை மனதில் கொண்டதாயினும், இப்பாடத்திட்டத்தை நிறைவேற்ற உச்ச தரத்திலான அர்ப்பணிப்பும் கடுமையான பணியும் செய்ய வேண்டியுள்ளது. மாணவர்கள் வருடத்தில் எக்காலப்பகுதியிலும் இப்பாடநெறியில் இணைந்து கொள்ளலாம். வகுப்புகள் வார நாட்களில் மாலை மற்றும் சனிக்கிழமைகளில் இடம்பெறும்.
விசேஷித்த தடங்கள்
முதுகலைமாணி/பட்டப்பின் டிப்ளோமா | வேதாகம கற்கைகள்
வேதாகமம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வேதப்பகுதிகளின் விளக்கவுரைக்கான பல்வேறு அணுகுமுறைகளை தெளிவாக புரிந்துகொள்ளுவதற்கும் குறிப்பிட்ட வேதப்பகுதிகளுக்கு பொருத்தமான வியாக்கியான முறைகளை பயன்படுத்தி தெளிவாக மதிப்பாய்வு செய்வதற்கும், வேதாகம கற்றலுக்கு உதவுகிற பல்வேறுபட்ட உசாத்துணை கருவிகளை பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெறவும் இப்பாடநெறியானது மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. மேலதிக தகவலுக்கு
முதுகலைமாணி/பட்டப்பின் டிப்ளோமா | கலாச்சார கற்கைகள்
இப்பாடத்தடமானது மாணவருக்கு திருத்தூதுப்பணி கோட்பாடு மற்றும் பிரதிபலிப்புக்கான வேதாகம மற்றும் இறையியல் அடித்தளத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குவதுடன், கலாச்சாரத்தை கற்றுக்கொள்வதற்கும் புரிந்துகொள்வதற்கும், ஒருவரின் சொந்த ஊழியத்தின் சூழலில் சிறப்பு பிரதிபலிப்புடன் மானுடவியல் கோட்பாடுகள் மற்றும் கலாச்சாரங்களுக்கிடையே காணப்படும் தொடர்பாடல் சிக்கல்களை நன்கு அறிந்துகொள்ளவதற்கும் உதவுகிறது. மேலதிக தகவலுக்கு
முதுகலைமாணி | ஆற்றுப்பணி
கிறிஸ்தவர்களை திறமையான ஆற்றுப்பணியாளர்களாக உருவாக்க பின்வரும் பயிற்றுவிப்பிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆற்றுப்பணி: மருத்துவம், கல்வி மற்றும் ஊழிய அமைப்புகளுக்கு கிறிஸ்தவ விசுவாசத்துடன் புதுப்பித்த ஆற்றுப்பணி கோட்பாடுகளை ஒருங்கிணைப்பதன் மூலமாக பல்வேறு பயனுள்ள ஆற்றுப்பணிகளை வழங்குகிறது.
கல்வி: மற்றவர்களுக்கு, குறிப்பாக சிங்களமொழி மற்றும் தமிழ்மொழி மூல கிறிஸ்தவ ஆற்றுப்பணியாளர்களை பயிற்றுவிக்கிறது.
பதிப்பு: ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் சூழ்நிலைக்கமைவாக வேதாகம அடிப்படையிலான வளங்களை வெளியிடுவதன் மூலமாக உறவுமுறை மற்றும் உணர்வுபூர்வ குணப்படுத்துதலையும் நல்வாழ்வையும் மேம்படுத்த உதவுகிறது. மேலதிக தகவலுக்கு