எங்களைப்பற்றி

img

எமது நோக்கம்

கொழும்பு இறையியல் கல்லூரியானது வேதாகமத்தில் வேரூன்றிய, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட, கிறிஸ்தவ நடத்தையில் முதிர்ந்த, அதியுயர்ந்த கல்வித்தராதரங்களுக்கு ஏற்றவாறு ஊழியத்தில் திறமை மிக்க கிறிஸ்தவர்களை பயிற்றுவிப்பதன் மூலமும் கிறிஸ்தவ வளங்களை வெளியிடுவதன் மூலமும் திருச்சபைகளுக்கு சேவையாற்ற தேவனால் அழைக்கப்பட்டுள்ளது.

திருச்சபைகள் மற்றும் நிறுவனங்களின் முழுத்தலைமைத்துவத்தையும் கட்டியெழுப்புவதில் முக்கியத்துவத்தை செலுத்துவதே, CTS இன் தனித்துவமான பண்பாகும். கிறிஸ்தவ ஊழியங்களில் சேவகம் செய்யும் தனிப்பட்டவர்கள் , மிஷனரி ஊழியர்கள், ஊழியத்தேவை உள்ள இடங்களில் ஊழியம் செய்வோர் யாராக இருந்தாலும், அவர்கள் கிறிஸ்துவுக்காக சிறப்பாக இயங்க CTS அவர்களை ஊக்கப்படுத்துகிறது.

எமது கல்விப்பீடமானது வாழ்நாள் கற்கையாளர்களாக காணப்படுவதால், மாணவர்களும் அவ்விதமாக காணப்படுவதற்கு ஊக்குவிக்கப்படுவர்.

எம் மாகாண கல்வி நிலையங்கள்

ஆரம்பத்திலிருந்தே CTS வகுத்துக்கொண்ட கட்டாய நோக்கங்களில் ஒன்று, இலங்கைத்தீவு முழுவதிலும் அமைந்துள்ள ஆற்றல் மிக்க மாணவர்களுக்கு கற்கைநெறிகளை கற்றுக்கொள்ள வசதிகளை ஏற்படுத்துவதாகும்.

இந்த ஆரம்ப முயற்சியில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பட்டப்படிப்புகளுக்கான பாடநெறிகளை வழங்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது. இது திருச்சபைகளுக்கான சூழல் சார்ந்த சுதேச பணி ஆசிரியர்கள், போதகர்கள் மற்றும் திருச்சபை வளங்களை வளர்ப்பதற்கு உதவுவதாகும்.

இன்று, கொஹுவல கல்லூரியை தவிர, மாகாணங்களிலுள்ள ஒன்பது இடங்களில் CTS கற்றல் நிலையங்கள் வியாபித்துள்ளன.

Provincial Study Centres Course Catalogue 2025 - Sinhala

Provincial Study Centres Course Catalogue 2025 - Tamil

https://www.cts.lk/wp-content/uploads/2024/08/30th-Anniversary-Logo-E-6000x2500.png

இணைக்கப்பட்டோருக்கான செய்திமடல்

மேலும் தகவல்களை பெற எங்கள் இணைக்கப்பட்டோருக்கான செய்திமடலில் இணைக
தமிழ்