எமது கல்வித்தத்துவம்

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் குறிக்கோள், பங்களிப்பு தொடர்பான கல்லூரியின் இலக்குகள், நம்பிக்கைகளை விபரிப்பதே கல்வித்தத்துவமாகும்.

எமது கல்வியானது முழுமையானதாகும். எமது இறையியல் கல்வியின் நோக்கமானது தெய்வீக நடத்தையுள்ள, வாழ்விலும், பணியிலும் முகம் கொடுக்கும் சவால்களைக் குறித்து வேதாகம ரீதியாக சிந்திக்கக்கூடிய, ஆர்வத்தோடும் திறமையோடும் ஊழியம் செய்யக்கூடிய, வேதாகமத்தை வாழ்வில் பிரயோகப்படுத்தி, சபைக்கும் சமூகத்துக்கும் தன்னை அர்ப்பணித்த மக்களை உருவாக்குவதாகும்.

அதியுயர் அதிகாரத்தை உடைய வேதாகமத்தை விசுவாசிக்கும் எமது அனைத்து கல்வித்துறைகளும், சமூக வாழ்வின் அனைத்து பகுதிகளும் வேதாகம போதனைகள் மீது நிலை நிறுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் அனைத்து கட்டளைகளுக்கும் கீழ்ப்படியும்படியாக மாணவர்கள் வழிநடத்தப்படுவார்கள் (மத்தேயு 28:18-20)

கற்றலானது பல்- பரிமாணங்களையுடையதும், உயர் கல்வியறிவை உள்ளடக்கியதும், ஊழிய ஆற்றல் மற்றும் நடத்தையில் உருவாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவும் காணப்படும். இந்த நோக்கத்திற்காக, பாடத்திட்டமானது மாணவர்களின் சிந்தனையில் (சிரம்), மனப்பாங்கு மற்றும் பெறுமதி (இருதயம்), செயல்முறையில் (கரம்) ஆகியவற்றில் ஈடுபடும் வகையில் எங்கள் பாடத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

கல்லூரியானது பரிசுத்த ஆவியானவரின் வரங்களினூடு பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு சபை பிரிவுகளை உள்ளடக்கிய பன்முகத்தன்மை உடையதை நாம் மதிக்கிறோம். கல்லூரியின் விரிவுரையாளர்கள் கல்லூரியின் விசுவாச அறிக்கையிற்கு இணங்கும் அதேவேளை சபைகளின் பல்வகை ஆராதனை முறைமைகளையும், அவர்கள் வலியுறுத்தும் விசுவாசங்களுக்கும் மதிப்பளிக்கிறார்கள். பன்முக கண்ணோட்டங்களுடைய கிறிஸ்தவர்கள் மத்தியில் எங்கள் விரிவுரையாளர்கள் தங்கள் சொந்த கண்ணோட்டத்தை வெளிப்படுத்துவதில் உணர்திறன் மிக்கவர்களாக காணப்படுவார்கள்.

வகுப்பறையில் ஆசிரியர்களும் மாணவர்களும் ஒருவருக்கொருவர் மதிப்பளித்து செயல்படும் பாதுகாப்பு சூழலை கொண்டதாக காணப்படும். மாணவர்களின் கேள்விகளும் கருத்துக்களும் அதிக அவதானத்துடன் கண்ணோக்கப்படும். ஆசிரியர்கள் மாணவர்களை நியாயமாக, பாகுபாடின்றி, பாலினம், இனம், சபை வேறுபாடுகளின்றி நடத்துவர். மாணர்களின் மதிப்பீடுகளானது கல்லூரியின் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். மாணவர்களது கருத்துகளுக்கு எதிரான பழிவாங்கல் அச்சம் கொள்ள தேவையில்லை.

விரிவுரையாளர்கள் கற்பித்தலுக்கான தகுதியுடையவராகவும், ஆயத்தமுடையவராகவும் இருப்பர். பாடநெறி தொடர்பான தற்கால சூழ்நிலை, அறிவு, ஆர்வம் என்பவற்றை கொண்டிருப்பர். மாணவர்களுக்கு பயனுள்ள கருத்துக்களை வழங்குவதற்கும், உரிய காலத்திற்குள் மதிப்பெண்களை வழங்குவதிலும் பொறுப்பினை கொண்டிருப்பர். தமது கற்பித்தல் பணிகளுக்காக அன்பளிப்புகள் அல்லது பிரதியீடுகளை பெற்றுக்கொள்ளவோ, எதிர்பார்க்கவோ மாட்டார்கள்.

எமது கல்வியானது கற்றல் இலக்கை கொண்டது. வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த மாணவர்கள், பெறுனராக மட்டும் காணப்படாமல் கல்வியில் பங்காளர்களாக காணப்படுவதால் கல்வியை தங்களது அனுபவத்தோடு வாழ்விலும் ஊழியத்திலும் நடைமுறைப்படுத்துவார்கள். வகுப்புகள் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படாமல் மாணவர்கள் கற்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படும். ஆசிரியர்கள் மாணவர்களின் கேள்விகளுக்கும், உரையாடலுக்கும் திறந்த மனதுள்ளவர்களாக இருப்பதுடன் பல்வேறுபட்ட கற்றல் முறைமைகளைப் பயன்படுத்துவர்.

எமது இறையியல் கல்வியானது திருத்தூதுப்பணிமயமானது. மாணவர்கள் தேவனின் திருத்தூதுப்பணிக்கான சவாலை ஏற்று, தங்கள் தனிப்பட்ட அழைப்பினை பல்வேறு ஊழியங்கள் வரை சபையிலும், ஊழியத்தேவையுள்ள இடங்களிலும், மாற்று கலாச்சாரத்திலும் பணி செய்வர். இறையியல் கல்வியானது திருத்தூதுப்பணியை குறித்த அவர்களது ஆவலை தூண்டி மழுங்கடிக்காமல், உறுதிப்படுத்தி, திசைதிருப்பாது வழிநடத்தும்.

எமது இறையியல் கல்வியானது நம் வாழ்வில் பிரதிபலிக்கிற, சமயத்துக்கேற்ற பதிலுரையாக, உலகில் ஈடுபடுவதற்கு பொருத்தமானதாக காணப்படும், மாற்றத்தை எதிர்கொள்ளும் நிச்சயத்துடன் தொடர்ச்சியாக மீளாய்வுக்கு உட்படுத்தப்படும்.

எமது இறையியலாக்கம் என்பது தனிமைப்படுத்தப்பட்ட தனிநபர்களாக அல்ல, மாறாக ஒரு கல்விச்சமூகமாக மேற்கொள்ளப்படுகிறது. இவர்கள் அறிவூட்டப்பட்ட, சவால் விடுக்கப்பட்ட, ஒருவராலொருவர் உத்வேகமளிக்கப்பட்ட, நம்பிக்கைக்குரிய ஆற்றல் பெற்ற கைவினைஞர்களாக வளர்க்கப்படுவர்.

எமது கல்விப்பீடமானது வாழ்நாள் கற்கையாளர்களாக காணப்படுவதால், மாணவர்களும் அவ்விதமாக காணப்படுவதற்கு ஊக்குவிக்கப்படுவர். கல்லூரியின் பழைய மாணவர்களுக்கு அவர்களுடைய அறிவினை ஆழப்படுத்தவும், வலுப்படுத்துவதற்குமான சந்தர்ப்பங்களை கல்லூரியானது தொடர்ச்சியாக வழங்கும்.

எமது மாணவர்கள் தனிப்பட்ட ரீதியில் இயேசு கிறிஸ்துவுடன் உள்ள உறவில் வளர்ந்து, ஸ்தல சபையில் வேரூன்றிய உண்மையுள்ள சீஷர்களாக மற்றும் தலைமைத்துவத்தில் பணிவிடை செய்கிறவர்களாக காணப்பட்டு, பரிசுத்த ஆவியின் நிறைவை வெளிப்படுத்தும், அன்பினால் அடையாளம் காணப்படும், தூய்மையை நாடும், தங்களது வரங்கள், வளங்கள், உறவுகளுக்கு, பொறுப்புடன் கணக்கொப்புவிப்பவர்களாக திகழுவர்.