Principal’s Message
ஊக்குவிப்பின் ஊழியமும் திருச்சபை வளர்ச்சியின் இரண்டாவது அலையும்?
ஐவோ பூபாலன்
“ஊக்குவிப்பினாலேயே நாம் வாழ்கிறோம், அது இல்லாமல் நாம் மெதுவாக, துக்கத்தோடு, கோபத்தோடு மரணமடைகிறோம் - " (செலஸ்ட் ஹோல்ம்)
“ஊக்குவிப்பு ஆத்துமாவிற்கான பிராணவாயு (ஜார்ஜ் ஆடம்)
தனது நகைச்சுவையான வார்த்தைகளால் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரான மார்க் ட்வைன் ஒருமுறை “ஒரு சிறந்த பாராட்டுதலினால் என்னால் இரண்டு மாதங்கள் வாழ முடியும்" என்று கூறினார். ஊக்கமளிக்கும் ஒரு வார்த்தை அல்லது செயலானது ஒருபோதும் மறக்கப்பட மாட்டாது. தொட்டிலிலிருந்து கல்லறை வரை, நாம் ஊக்குவிப்பிற்காக ஏங்குகிறோம். துரதி~;டவசமாக, ஊக்குவிப்பு என்பது நாம் எளிதாக அளிக்கக்கூடிய ஒரு பரிசாக காணப்பட்டாலும், அதை ஒருசிலரே தமது வாழ்வில் ஒரு பழக்கமாக பகிர்ந்து கொள்கிறார்கள். பலர் சிந்திப்பதைப்போல ஊக்குவிப்பு என்பது நமது வாழ்க்கைப்பயணத்திற்கு அப்பாற்பட்ட விடயமல்ல. மாறாக, அது வாழ்க்கைக்கு அவசியமானதொன்றாகும். மேலும், ஊக்குவிப்பு காணப்படுகிற இடமெல்லாம், சந்தேகத்திற்கு இடமின்றி அங்குள்ள மக்களிலும், சமூகங்களிலும் வலுவான மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சி காணப்படும்.
முதலாவது தலைமுறை கிறிஸ்தவர்கள் யூதேயாவிலிருந்து சிதறடிக்கப்பட்டபோது, சிலர் வடக்கே 100 மைல் தொலைவில் உள்ள அந்தியோகியாவிற்கு பயணித்தனர். மிகவும் ஆர்வமுள்ள சுவிசே~கர்களாக போகிற வழியில் தாங்கள் சந்தித்த அனைவரிடமும் அதிலும் குறிப்பாக பெரும்பான்மையான புறஜாதிகள் மத்தியில் சுவிசே~த்தை பகிர்ந்து கொண்டனர். லூக்காவும்கூட “பெருமளவிலான” புறஜாதியினர் கர்த்தரிடத்தில் மனந்திரும்பியதாக பதிவு செய்கிறார். இதை நான் அந்தியோகியாவில் உள்ள திருத்தூதுப்பணி திருச்சபையின் முக்கிய கதையில் திருச்சபை வளர்ச்சியின் முதல் அலை என்று நினைக்கிறேன் (அப்போஸ்தலர் 11:19-21).
ஆனால் இரண்டாவது அலையும் காணப்பட்டது - இதற்காக திருச்சபையானது இன்னொரு பக்கத்திலிருந்து இரண்டாவது நகர்வினை ஆரம்பிக்க வேண்டியிருந்தது.
பெருமளவிலான புறஜாதியினர் விசுவாசிகளாகி கர்த்தரிடத்தில் திரும்பியதை எருசலேமில் உள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டபோது, தாங்கள் ஒரு முக்கியமான தீர்மானத்தினை எடுக்க வேண்டும் என்பதை உணர்தனர். ஏனெனில், யூத பின்னணியிலிருந்து வந்த எவருக்கும் வரலாற்று ரீதியில் இவர்கள் “புறஜாதியினர்” என்பதாகவே காணப்பட்டனர். இந்த புதிய யதார்த்தத்தை அவர்கள் எவ்வாறு கையாண்டார்கள் என்பதானது திருச்சபையின் வரலாற்றின் போக்கினை மாற்றக்கூடியதாக காணப்பட்டது. விருத்தசேதனம் செய்யப்படாத புறஜாதிகளை மேசியாவின் சமூகத்திற்குள் அனுமதிப்பது பொருத்தமற்றது என்று யூத விசுவாசிகளிடையே கானப்பட்டதன் நிமித்தமாகவா? யூதேயாவில் உள்ள இந்த ‘பாரம்பரிய’ கிறிஸ்தவர்கள் அந்தியோகியாவில் உள்ள அந்த ‘புதிய’ திருச்சபைகளை பற்றி சில மனக்கசப்பான கருத்துக்களை வெளியிட்டார்களா?
இதன் காரணமாக, அவர்கள் தம்முடன் அந்த நேரத்தில் இருந்த சிறந்த அப்போஸ்தல பிரதிநிதியை அனுப்பினர். ஆனால் அது பேதுருவோ, யாக்கோபுவோ அல்லது அன்புள்ள சீ~னான யோவானோ அல்ல. மாறாக, அது அவர்கள் நீண்ட காலமாக "ஊக்குவிப்பின் (ஆறுதலின்) மகன்" என்று புனைப்பெயரால் அழைத்த மனிதனான பர்னபாஸ் ஆவார்! பர்னபாஸ் அந்தியோகியாவுக்கு போய் சேர்ந்து கடவுள் எத்தகைய காரியத்தை செய்கின்றார் என்பதை கண்டுகொண்டபோது, “சந்தோ~ப்பட்டு, கர்த்தரிடத்தில் தமது முழு இருதயத்தோடு நிலைத்திருக்கும்படி அனைவரையும் ஊக்குவித்தான் ” (அப்போஸ்தலர் 11:23) என லூக்கா குறிப்பிடுகிறார். அவரது ஊக்குவிப்பின் ஊழியமானது ஆழமான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதையும் அந்தியோக்கியாவில் திருச்சபை வளர்ச்சியின் இரண்டாவது அலையை அது எவ்வாறு ஏற்படுத்தியது என்பதையும் “அவன் நல்லவனுமு;, பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்; அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்" (அப்போஸ்தலர் 11:24) என்பதாக நாம் வாசிக்கிறோம்.
இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுவிசே~த்தை பிரசங்கிக்க துடித்த சுவிசே~கர்களின் தலைமுறையை எழுபது மற்றும் எண்பதுகளில் கடவுள் எழுப்பினார். ஒவ்வொரு மாவட்டத்திலும். அவர்களின் பூர்வீக, முன்னோடி முயற்சிகள் சிறந்த முடிவுகளை தந்தன, 100 ஆண்டுகால வீழ்ச்சிக்கு பிறகு இலங்கை திருச்சபை மக்கள் தொகை விகிதத்தில் பாரிய அளவில் வளர்ந்தது. இருப்பினும், அந்தியோக்கியா திருச்சபையின் கதைக்கு மாறாக, இலங்கையில் இந்த வியத்தகு உயர்வு சற்று கவனத்தை ஈர்த்தது: செய்தியை கேட்பதற்க எந்த 'எருசலேமும்” இல்லை, இரண்டாவது நகர்வினை நகர்த்துவதற்கு 'பர்னபாவும்” இல்லை. அதன்பிறகு, போதிய சீ~த்துவப்பயிற்சி மற்றும் கற்பித்தல் இன்மை, குடும்பம் மற்றும் நிதிநிலைமைகளில் காணப்பட்ட அன்றாட போராட்டங்கள், கிறிஸ்துவின் சரீரத்திற்குள் காணப்பட்ட காயங்கள் மற்றும் முரண்பாடுகள், துன்புறுத்தலின் காலங்கள் மற்றும் வேதாகமத்திற்கு மாறான தவறான போதனைகள் ஏற்படுத்திய சிதைவுகள் உள்ளிட்ட அனைத்தும் ஒன்றுசேர்ந்து திருச்சபையை அழித்தன. “ஆத்துமாவிற்கு ஆக்;சிஜன்" இல்லாமல் திருச்சபையானது அழிவின் அபாயத்தினை எதிர்கொண்டிருக்கின்றது.
இது “இன்று” என்னப்படுமளவும் ஒருவரையொருவர் ஊக்குவியுங்கள்" (எபிரெயர் 3:13) என்ற வேதாகம வாக்கியத்தின் கட்டளையை உறுதியாக கடைப்பிடித்து, நமது திருச்சபை பிரிவுகள், நமது தேசத்தில் உள்ள திருச்சபைகள் மற்றும் சீ~த்துவ குழுக்களின் மத்தியில் ஊக்குவிக்கும் ஊழியத்தை கட்டாயமாக ஆரம்பிக்கப்பட வேண்டிய தருணம் இதுவாகும். .
எமது தாமதமாக கீழ்ப்படிதலானது, பரிசுத்த ஆவியானவர் திருச்சபை வளர்ச்சியின் அடுத்த அலையை உருவாக்குவதற்கான ஆரம்ப புள்ளியாக அமையுமா என்பது யாருக்கு தெரியும்?
ஐவோ பூபாலன், மார்கழி, 2024