CTS வெளியீட்டுப்பிரிவு
CTS ஆனது அதன் ஆரம்பத்திலிருந்தே, ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் எழுதப்பட்ட தரமான கிறிஸ்தவ வளங்களை வெளியீடு செய்ய அர்ப்பணித்துள்ளது. CTS இன் வெளியீட்டுப்பிரிவு இறையியல் கற்றலை ஆதரிப்பதற்கு இன்றைய சூழலுக்குப் பொருத்தமான வளங்களை உருவாக்க செயல்படுகிறது. தனது முதல் வெளியீடாக பேராசிரியர் ஜி. பி. வி. சோமரத்னாவினால் சிங்கள மொழியில் எழுதப்பட்ட இறையியல் அகராதியை 2001 ஆம் ஆண்டில் வெளியிட்டது. அதன்பின் ஊவுளு வெளியீட்டு பிரிவானது மூலமொழி மற்றும் மொழிபெயர்க்கப்பட்ட வெளியீடுகளை உருவாக்கி 2018 வரை 110 தலைப்புகளில் வெளியிட்டுள்ளது.
CTS நூலகம்
1994இல் 5,500 புத்தகங்களின் தொகுப்புகளோடு ஆரம்பிக்கப்பட்ட கொஹுவலை நூலகமானது தற்போது 38000இற்கும் அதிகமான தலைப்புகளில் வியாபித்திருக்கிறது. அவற்றில், இலங்கை, பௌத்த மதம், விஞ்ஞானம் மற்றும் சமயம், இஸ்லாம், ஆலோசனை, பிரெயிலில் உள்ள கிறிஸ்தவ வளங்கள், மற்றும் CTS விளக்கவுரைகள் மற்றும் ஆய்வறிக்கைகள் பற்றிய பல சிறப்பு தொகுப்புகள் இதில் அடங்கும். இதற்கு மேலதிகமாக மிக அவசியமானதும், நடைமுறை காலத்திற்குரிய வகையிலான தமிழ் கிறிஸ்தவ நூலகத்தை இந்த நாட்டிலேயே, எமது வடகொழும்பு கல்வி நிலையமானது தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் யாழ்ப்பாணத்தில் உள்ள CTS நூலகத்தில் 3,500இற்கும் மேற்பட்ட புத்தகங்களின் தொகுப்பு உள்ளது.
CTS மூடுல்
மூடுல் என்பது ஒரு இணையத்தள கல்வி தளமாகும், இது உலகெங்கிலும் உள்ள கல்வி நிறுவனங்களால் கற்றலுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட மத்திய ஸ்தலமாக கல்வியை வழங்க பயன்படுகிறது.
CTS too has made it available for all its students. It’s a space where students who are enrolled for the course will be able to download class content like lecture presentations, journal articles, additional readings and other course related resources. Please note that Each student will have to register by creating an account on the website. The necessary instructions are laid out on the link.