கொழும்பு இறையியல் கல்லூரி ஏன் முக்கியமானது?
இது எமது 30 ஆவது ஆண்டு நிறைவு. இலங்கையிலுள்ள திருச்சபைகளின் தலைவர்களை இறையியல் ரீதியாக தயார்படுத்துவதற்காக கொழும்பு இறையியல் கல்லூரியானது தனது கதவுகளை திறந்த நாளாக 1994 வைகாசி 31-ம் அமைந்தது. பலருக்கு நான் கூறுகிற இவ்விடயமானது ஆர்வத்தை தூண்டலாம். 1994-ல் ஒரேயொரு கல்வி நிலையமாக ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரியானது தற்போது பத்தாக வளர்ச்சியடைந்துள்ளது. ஆரம்பத்தில் ஏறத்தாழ 40 மாணவர்களுடன் காணப்பட்ட வகுப்பறைகளில் தற்போது 800-ற்கும் மேற்பட்ட மாணவர்கள் காணப்படுகின்றனர், மேலும் 1997-ம் ஆண்டு 17 பட்டதாரிகளை ஏற்படுத்திய வகுப்பறை 2023-ம் ஆண்டு வரும்பொழுது 824 முன்னாள் மாணவர்களை கொண்டிருக்கிறது!
வைகாசி முதல் ஆடி வரை கொண்டாடப்பட்ட எமது நிறைவாண்டு விழா நிகழ்வுகளில் எமது இறையியல் கல்லூரியினுடைய வளர்ச்சியின் அற்புதமான மைல்கற்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம். இருப்பினும், எனக்குள் ‘ஆனால் எது?’ கொழும்பு இறையியல் கல்லூரியை மிகவும் அவசியமானதாக்குகிறது? அடுத்த 30 ஆண்டுகளுக்கு கொழும்பு இறையியல் கல்லூரி ஏன் அவசியம்? என்ற கேள்விகள் எழும்பியதை உணர்ந்தேன். கொழும்பு இறையியல் கல்லூரி ஏன் முக்கியமானதாக இருக்கிறது என்பதற்கு நாம் நம்புகிற சில காரணங்கள் இதோ:
நற்செய்தி முக்கியம் என்பதால் கொழும்பு இறையியல் கல்லூரி முக்கியம்.
கொழும்பு இறையியல் கல்லூரி என்பதுதான் அதன் முடிவல்ல. திருச்சபையானது இலங்கைக்கும் சகல தேசங்களுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை பறைசாற்ற துணை நிற்பதற்காக இறையியல் கல்வியானது உயிர்ப்புடன் காணப்படுகிறது. இந்த உணர்வினை பகிர்ந்து கொண்ட ஆண்களும் பெண்களுமே கொழும்பு இறையியல் கல்லூரியின் ஸ்தாபகர்களாயினர். இறையியல் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தக்கூடியதான சுவிசேஷப்பணியை உலகிற்குள் முன்னெடுத்துச்செல்வதே எமது வாஞ்சையாகும்.
திருச்சபை முக்கியம் என்பதால் கொழும்பு இறையியல் கல்லூரி முக்கியமானது
நிசேயா விசுவாசப்பிரமாணம் கூறுகிறபடி, பரிசுத்தமும், பொதுவுமான ஒரே அப்போஸ்தலசபை உண்டென்று நாம் விசுவாசிக்கிறோம். இலங்கையின் முழு திருச்சபையும் கிறிஸ்துவின் சரீரமும், மணவாட்டியும் ஆகும். இதனாலேயே கொழும்பு இறையியல் கல்லூரி என்பது அனைத்து கிறிஸ்தவ மரபுகளும் மதிக்கப்படுகிற ஒரு இடமாக விளங்குவதோடு, அனைத்து கிறிஸ்தவ பிரிவுகளை சார்ந்த விசுவாசிகளும் வரவேற்கப்படுகிற இடமாகவும் விளங்குகிறது. ஆரம்பத்திலிருந்தே கொழும்பு இறையியல் கல்லூரியானது நம்மை பிளவுபடுத்தும் வேறுபாடுகளை ஒதுக்கிஇ பன்முகத்தன்மையை அரவணைத்துக்கொண்டு கிறிஸ்துவிற்குள் நாம் அனைவரும் ஒன்றாகலாம் என்பதை நிரூபிக்கிறது!
வேதாகமம் முக்கியம் என்பதால் கொழும்பு இறையியல் கல்லூரி முக்கியமானது
கிறிஸ்தவ ஐக்கியத்திற்கான நமது அர்ப்பணிப்பானது பரிசுத்த வேதாகமத்தின் அதிகாரத்திற்கான நமது அர்ப்பணிப்பினால் ஒழுங்குபடுத்தப்படுகிறது. இன்னொரு வகையில் கூறுவதானால், கிறிஸ்தவ ஒன்றிப்பு (கிறிஸ்தவ ஐக்கியம்) பற்றிய நமது தரிசனமானது, சுவிசேஷ கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான தரிசனமாகும்: அதாவதுஇ வேதாகமமே நாம் எதை விசுவாசிக்க வேண்டும்?, எப்படி வாழ வேண்டும்? என்பதற்கூடாக நம்மை வழிநடத்தக்கூடிய இறுதி அதிகாரம் படைத்தது என்கிற பொதுவான உறுதிப்பாட்டை மையமாகக்கொண்டு கட்டியெழுப்பப்பட்ட ஐக்கியமாகும்.
பல வருடங்களாக உலகளாவிய திருச்சபையானது கடவுளுடைய வார்த்தையான வேதாகமத்தின் நம்பகத்தன்மை மற்றும் பூரணத்துவம் ஆகியவற்றின் மீதான நம்பிக்கையை இழந்து பாதிக்கப்பட்டு காணப்பட்டதால், வேதாகமத்தை கற்பிப்பதற்காக கொழும்பு இறையியல் கல்லூரியானது ஸ்தாபிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள திருச்சபையை மீண்டும் வளர்ச்சியடைய செய்வதற்கு வேதாகமத்தின் மீதான இழந்துபோன இந்த நம்பிக்கையை மீட்டெடுத்து நிலைப்படுத்துவதானது மிகவும் இன்றியமையாததாகும்.
கிறிஸ்தவ நட்புறவு முக்கியம் என்பதால் கொழும்பு இறையியல் கல்லூரி முக்கியமானது
கிறிஸ்தவ நட்புறவு மூலமாகவே பூமியில் கடவுளின் இராஜ்யத்திற்கான மிகப்பெரிய முன்னேற்றங்கள் சாத்தியமானது என்பது, கிறிஸ்தவ வரலாறில் பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் உண்மைகளில் ஒன்றாகும். இயேசு ஒருமுறை தமது சீஷர்களை பார்த்து, “நீங்கள் எனது சிநேகிதர்” எனக்கூறினார். இயேசுவின் உலகை மாற்றுவதற்கான பணியானது, அவர் “சிநேகிதர்கள்” என்றழைத்த அந்த சிலரையே சார்ந்திருந்தது.
எப்போதோ, யாரோ ஒருவர் “நமது கிறிஸ்தவ நட்புறவை கவனமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும் ஏனென்றால் அது ஒருநாள் உலகினை மாற்றக்கூடும்” என்பதாக கூறினார். கொழும்பு இறையியல் கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்படும் வாழ்நாள் நட்புறவுகளானது, கடவுளின் கிரியைகளுக்கான பலம் பொருந்திய வழிமுறையாக அமையுமென்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
மரபுகள் முக்கியம் என்பதால், கொழும்பு இறையியல் கல்லூரி முக்கியமானது
“நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி.” (2 தீமோத்தேயு 2:2) என அப்போஸ்தலனாகிய பவுல் தனது இறுதி நிருபத்தில் தீமோத்தேயுவிடம் கூறுகிறார். இது பவுல் கிறிஸ்துவின் பணியை புவியியல் ரீதியாக முன்னேற்றுவதற்கான வாய்ப்புகளை தேடிக்கொண்டிருந்த அதேவேளை, தீமோத்தேயு போன்ற இளம் தலைவர்களுக்கு சுவிசேஷத்தின் செய்தியானது தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுவதை உறுதி செய்தார் என்பதை இது காண்பிக்கிறது.
இந்த மைல்கல்லை கொண்டாடுவது என்பது வெறுமனே கொழும்பு இறையியல் கல்லூரியின் 30 வருட வரலாற்றை திரும்பிப்பார்ப்பது மட்டுமல்ல, எதிர்வரும் 30 ஆண்டுகளை முன்னோக்கி பார்ப்பதையும் உள்ளடக்கியதாகும். நமது மரபுகளை குறித்து நோக்கமாயிருப்பது என்பது கடவுளுடைய கிரியைகளை விசுவாசித்து இவற்றை நாம் எமது எதிர்கால சந்ததியினிடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்கிற கடப்பாட்டை எமக்கு வலியுறுத்துகிறது.
நீங்கள் மேலே காண்கிறபடி, கடவுள் அக்கறை செலுத்துகிற நற்செய்தி, வேதாகமம்இ திருச்சபை, கிறிஸ்தவ நட்புறவு மற்றும் தெய்வீக மரபுகள் போன்றவற்றை சேவிக்க வேண்டியிருப்பதால், கொழும்பு இறையியல் கல்லூரி முக்கியமானது (இன்று மட்டுமல்ல, இன்னும் அநேக தசாப்தங்களுக்கும் கூட) என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
இதுவரைக்கும், நீங்கள் கொழும்பு இறையியல் கல்லூரியுடன் இணைந்து துணை நின்றதற்கு நன்றி. அடுத்த 30 வருடங்களுக்கான கடவுளுடைய சித்தத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து கண்டுகொள்வோம்!
ஐவோ பூபாலன், PhD
2024, ஐப்பசி 1